கனடாவில் தமிழ் பணியாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Report Print Mohana in கனடா

கனடா- 2012ல் எரிவாயு நிலையமொன்றில் எரிவாயு நிரப்பிவிட்டு பணம் செலத்தாது ஓடிய சம்பவம் ஒன்று குறித்து கொலை செய்யப்பட்ட எரிவாயு நிலைய பணியாளரை கொலை செய்த நபருக்கு 16-வருடங்கள் பரோலில் வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2012செப்ரம்பரில் 44-வயதுடைய ஜேயேஸ் பிரஜாபதி என்பவர் எஸ்யுவி வாகனமொன்றினால் மோதி கொல்லப்பட்டார். இவர் பணிபுரிந்த ஷெல் எரிவாயு நிலையத்தில் குறிப்பிட்ட நபர் 112டொலர்களிற்கு எரிவாயு நிரப்பி விட்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் மார்லி மற்றும் றோஸ்லோன் அவெனியுவில் நடந்தது.

இதில் சம்பந்தப்பட்ட 44-வயதுடைய மக்ஸ் ருரிவென் என்ற நபர் இக்கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ஜூரி குழுவினரால் அக்டோபர் 10 குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார்.

பிரஜாபதி வாகனமொன்றினால் 70மீற்றர்களிற்கும் அதிகமான தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதை கண்ட சாட்சியங்கள் சாரதியை நிறுத்துமாறு சத்தம் போட்டுள்ளனர்.

அக்டோபரில் ருரிவென் தனது வாகனம் பிரஜாபதியின் மரணத்திற்கு காரணமாக இருந்ததை ஒப்பு கொண்டார்.

ஆனால் பிரஜாபதி தனது வாகனத்தின் முன்னால் பாய்ந்ததை தான் காணவில்லை என வாதாடியுள்ளார். தான் வழிகாட்டுதலிற்கு பயன்படுத்தப்படும் கோபுர வடிக குறி ஒன்றை இழுத்து செல்வதாக நம்பியதாக தெரிவித்தார்.

புதன்கிழமை நீதி மன்றத்திற்கு வெளியே மொழிபெயர்பாளர் ஒருவரின் உதவியுடன் பிரஜாபதியின் மனைவி வைசாலி பிரஜாபதி நீதிபதியின் முடிவை தான் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

தனது கணவருக்கு நடந்தது மிக மிக துயரமானது. மற்றவர்களிற்கு இவ்வாறு நடக்க கூடாதென தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்து மூன்று வருடங்களின் பின்னர் ருரிவென் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.பொலிசார் இக்கொலை சம்பந்தமாக தகவல் கொடுப்பவர்களிற்கு 25,000டொலர்கள் வெகுமானம் வழங்குவதாக அறிவித்து 48-மணித்தியாலங்களின் பின்னர் செப்ரம்பர் 17, 2016ல் மொன்றியலில் கைது செய்யப்பட்டார்.

மொன்றியலில் இருந்து ரொறொன்ரோ கொண்டுவரப்பட்டார்.

இந்த‘gas-and-dash' சம்பவத்தை நீதிமன்றம் மிகவும் தீவிரமானதாக எடுத்துள்ளது எனவும் இதுவரை வழங்கப்படாத அளவு கடினமானதொரு தண்டனை எனவும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக் கோல் தெரிவித்துள்ளார்.

இது ஒரு போக்குவரத்து சம்பவம் அல்ல. இது-இந்த வழக்கு-ஒரு இரண்டாம்-நிலை கொலை ஆகியுள்ளதென கூறப்படுகின்றது.

அப்பாவி பணியாளரின் உயிர் பலி மற்றும் சம்பந்தபட்டவர்களை பொலிஸ் அதிகாரிகள் துரத்தும் போது அவர்களது உயிர்களும் ஆபத்தில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு திருடர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்