அடுத்த மூன்று வருடங்களில் முதியோர்களின் சுகாதார திட்டத்திற்காக 155மில்லியன் டொலர்களை செலவிட ஒன்ராறியோ திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் மாகாணத்தில் நீண்ட-கால பராமரிப்பு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவும் பராமரிப்பு ஊழியர்களின் பணி நேரங்களை அதிகரிக்க செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் 20-புள்ளி திட்டம்--நம்பிக்கையுடனான முதிர்ச்சி என அழைக்கப்படும்- மாகாணத்தின் முதியோர்களிற்கான சேவைகளை உயர்த்த உதவும் என அறியப்படுகின்றது. இத்தகவலை முதல்வர் கத்லின் வின் இன்று அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாகாணம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 5,000புதிய நீண்ட கால பராமரிப்பு படுக்கைகளை ஏற்படுத்துவதுடன் அடுத்த பத்தாண்டுகளில் 30,000 ஆக்குவதெனவும் உறுதிமொழி அளிக்கின்றது.
மேலதிக ஊழியர்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலதிக பொழுது போக்கு வளங்களையும் வழங்கும் என வின் தெரிவித்துள்ளார். இதற்காக 15மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலவிடும் எனவும் தெரிவித்தார்.