கனடாவில் டெரான் டாட் என்னும் முதியவர் தன்னைப் பார்த்துக் கொள்ள வருபவருக்கு வாடகையில்லா வீடும், ஊதியமும் வழங்குவதாக அறிவித்துள்ள விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.
Nova Scotia பகுதியில் வசித்து வரும் குறித்த முதியவரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னையும் தான் வளர்க்கும் கோழிகளையும் பார்த்துக் கொள்ள ஒரு வேலையாளை தேடி வருகிறார்.
அவரது இரண்டு மகள்களும் அவரை விட்டு 115 கி.மீ தொலைவில் வசித்து வருவதால், தங்களது தந்தையை பார்த்துக் கொள்ளவும், 100 ஏக்கர் அளவிலான நிலங்களை பராமரிக்கவும் ஒரு வேலையாள் வேண்டும் என டெரான் டாட் சார்பில் விளம்பரத்தினை வெளியிட்டனர்.
அவர் எதிர்பார்க்கும் நபர் தன்னை பார்த்துக் கொள்பவராகவும், சமைக்க தெரிந்த, வீட்டு வேலைகளை செய்யக் கூடிய, தன் தோட்டத்தினை பராமரிக்க கூடிய வகையில் இருக்க வேண்டும் என்கிறார்.
அப்படி வருபவருக்கு வீட்டில் வசிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதோடு, ஆண்டுக்கு 28,000 டொலர்கள் ஊதியமாக தருவதாகவும் டாட் கூறியுள்ளார்.
இதுவரை 45,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், சீனாவில் இருந்து மட்டும் நூற்றுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைக்கு சிறந்த ஆள் கிடைக்கும் என நம்புகிறேன் என்று டாட் தெரிவித்துள்ளார்.