பாரடைஸ் பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ள 3000 கனடிய நிறுவனங்கள்

Report Print Kabilan in கனடா
53Shares

பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியிடவுள்ள கடல் சார் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் வரி குறித்த பட்டியலில் கனடாவைச் சேர்ந்த 3000 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 3,300 கனடிய நிறுவனங்கள், டிரஸ்டுகள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள் பாரடைஸ் பேப்பர்ஸில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலமாக கடல் சார் நிறுவனங்களில் முதலீடுகள், பண பரிமாற்ற வரிகள் மற்றும் பண வசூல்

முதலியவை குறித்து மில்லியன் கணக்கான பதிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பதிவுகள் மூலம் ஆப்பிள்பை நிறுவனத்தின் நிதிச்சேவைகளை பெரிய அளவில் கனடா தான் கொண்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், வெளியான தரவுகள் மூலமாக கடல்சார் முதலீடு நிறுவனங்களில் பண பரிமாற்றங்களில் ஈடுபடும் பிற நிறுவனங்கள் எவ்வாறு தங்களுக்கான வரிகளை குறைக்கின்றன அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

பாரடைஸ் பேப்பர்ஸ், ஆப்பிள்பை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்காக கணக்காளர்கள், நிபுணர்கள் என நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளது.

மேலும், பெர்முடா மற்றும் கேமன் தீவுகளில் முதலீடு செய்த தனிநபர்கள், 306 அமைப்பாளர்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கனடிய வருவாய் அமைச்சகம் கூறுகையில், இது போன்ற வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள கனடிய நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்