ரொறொன்ரோ வீட்டு விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது

Report Print Mohana in கனடா

ரொறொன்ரோ வீடுகளின் விலை செப்ரம்பரை விட அக்டோபரில் 12சத விகிதம் அதிகரித்துள்ளதாக ரொறொன்ரோ ரியல் எஸ்டேட் வாரியம் தெரிவிக்கின்றது.

இந்த அதிகரிப்பு இலையுதிர் காலத்தின் ஒரு வலுவான சந்தை நிலையை சுட்டிக் காட்டுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

வருடத்தில் செப்ரம்பர் மற்றும் அக்டோபரிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வீடுகளின் விலை அதிகரிக்கின்ற போதிலும் இந்த வருடம் வழக்கத்தை விட அதிக அதிகமானதெனவும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபரில் 7,118 வீடுகள் விற்பனையாகி உள்ளன.

அக்டோபர் மாதத்தின் சராசரி விற்பனை விலை டொலர்கள் 780,104 எனவும் 2016அக்டோபருடன் ஒப்பிடுகையில் 2.3சதவிகிதம் அதிகமாகும்.

வருடத்தின் முதல் 10மாதங்களில் விற்பனைகள் 80,198ற்கு சறுக்கி 2016 இதே காலப்பகுதியை விட 19சதவிகமாக குறைந்து காணப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்