கனடாவில் கார் விபத்தில் பெண் பரிதாப பலி

Report Print Santhan in கனடா

கனடாவில் ஏற்பட்ட கார் விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கனடாவின் Toronto பகுதியில் உள்ள York University அருகில் கடந்த செவ்வாய் கிழமை இரவில் கார் விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், கடந்த செவ்வாய் அன்று இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணி அளவில் Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவில் இரண்டு கார்கள் ஒன்றை ஒன்று மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவரின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விபத்திற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...