கனடா ஒட்டாவா நகரில் துப்பாக்கி பிரயோகம்

Report Print Thayalan Thayalan in கனடா

ஒட்டாவா நகரின் மேற்கு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிரவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று இரவு 10 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் எவருக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பவ இடத்தில் குற்றத்தடுப்பு பொலிஸார்குவிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாக்குதல் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தம்மை தொடர்புகொள்ளுமாறு ஒட்டாவா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது ஒரு தீவிரவாத தாக்குதல் என ஊர்ஜிதப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...