கனடாவில் குடியுரிமை பெறுவது எப்படி?

Report Print Shalini in கனடா

கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு ஒருவர் 6 வருடங்கள் வரை கனடாவில் இருக்க வேண்டும்.

உங்களுக்கு 18 வயது நிரம்பவில்லை என்றால் கனடா குடியுரிமை பெறுவது கடினம்.

மைனர்களுக்குத் தங்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளர் தான் விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது காப்பாளருக்கும் சேர்ந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பெற்றோர் ஏற்கனவே கனடா குடியுரிமை பெற்று இருக்க வேண்டும், இல்லை என்றால் குடியுரிமை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

கனடாவில் வேகமாகக் குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் எண்ட்ரி முறைகள் உள்ளன. இதன் கீழ் திறமையான ஊழியர்களுக்கு அவர்களது திறமையின் கீழ் வேலையும் அளிக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் எண்ட்ரி மூலம் வருபவர்களுக்கு அவர்களது அறிவு, வேலை மற்றும் பிற விண்ணப்பதாரர்களைப் பொருத்து குறிப்பிட்ட மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

கூடிய மதிப்பெண்கள் பெறுபவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொள்ள வரவேற்கப்படுவார்கள்.

நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் 5 வருடத்தில் குறைந்தது 2 வருடங்கள் கனடாவில் தங்க வேண்டும். இரண்டு வருடம் வரை தங்கவில்லை என்றால் நிரந்தர வீடு நிலையினை இலக்க நேரிடும்.

சிலநேரம் கனடாவில் வசிக்கவில்லை என்றால் கனடாவின் அரசு சார்ந்த வேலையில் வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும்.

6 வருடத்தில் 4 வருடம் வரை வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். ஏன் என்றால் உங்கள் வேலையின் முக்கியத்துவத்தினை அவர்கள் அறிவதற்காக.

கனடாவில் இரண்டு மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளன. அவை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகும். குடியுரிமை பெற இரண்டில் ஒரு மொழியில் தங்கு தடையின்றி இலக்கணம், திசைகள் மற்றும் தேவையான அளவு திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

கனடாவின் வரலாறு, மதிப்புகள், நிறுவனங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறையான வினாடி வினா தேர்வுக்கு விடையளிக்க வேண்டும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...