தாயை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

Report Print Mohana in கனடா

வன்கூவரை சேர்ந்த மனிதன் ஒருவன் தனது தாயை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 12வருடங்களிற்கு பரோலில் வர முடியாதெனவும் விதிக்கப்பட்டுள்ளது.

2014 நவம்பரில் பிரையன் வைட்லொக என்ற நபர் 61வயதுடைய தனது தாய் பாபராவை அடித்து கொலை செய்துள்ளார்.

இவரது உடல் தலை மற்றும் கழுத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களுடன் வன்கூவரில் டன்பார்-சவுத்லான்ட் பகுதியில் அவரது வீட்டிற்கு வெளியே உள் முற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

தாயை கொன்ற பின்னர் அந்த சூனியக்காரியை நான் கொன்றேன் என தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளார்.

12வருடங்களின் பின்னர் பரோலில் வைட்லொக் வெளியே வருவது குறித்து தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாபராவின் கணவர் வரன் கிளயர் ஹவாயிலிருந்து தெரிவித்துள்ளார். வைட்லொக் வெளியே வருவது பொதுமக்களிற்கு பாதுகாப்பற்றதெனவும் கிளயர் தெரிவித்தார்.

வைட்லொக், பேஸ் போல் மட்டையால் 2012ல் ஜேர்மன் செப்பேட்டை அடித்து துன்புறுத்தியதாக மிருக வதை குற்றம் சுமத்தப்பட்டது. அடித்த நாயை குப்பைத்தொட்டி ஒன்றிற்குள் எறிந்து சாகடித்ததாக கூறப்பட்டுள்ளது.

60-நாட்கள் சிறைத்தண்டனையும் விலங்கு உரிமை மீது வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...