மனைவியை கொலை செய்த இலங்கையர்: நாடு கடத்த செலவான தொகை எவ்வளவு?

Report Print Vethu Vethu in கனடா
382Shares
382Shares
ibctamil.com

கனடாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை, இலங்கைக்கு நாடு நடத்துவதற்காக செலவிடப்பட்ட செலவு தொடர்பில் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையருக்கே இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 17000 டொலர் வரி செலுத்துவரால் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

பொதுவாக கனேடிய நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் 30 மாதங்களுக்கே எடுத்து கொள்ளப்படும்.

எனினும் சிவலோகநாதன் தனபாலசிங்கத்தின் வழக்கு விசாரணைகளுக்கு 56 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது.

அவர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

தனது மனைவியை கொலை செய்த 9 மாதங்களில் அவர் 3 முறை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்