கனடாவில் இணையம் மூலம் காதல் வலை: நம்பிச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்

Report Print Thayalan Thayalan in கனடா

கனடாவில் இணையத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான பெண் ஒருவரை ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா – கல்கரி பகுதியில் வசித்துவரும் 37 வயதான பெண் ஒருவர் இணையத்தளம் ஒன்றினூடாக ஆண் ஒருவருடன் நட்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அண்மையில் தனது இணைய நண்பனைப் பார்ப்பதற்காக அவர் சென்றபோது, குறித்த பெண் ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைத்து தொடர்ந்து 11 மணிநேரம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற பெண் குடும்பத்தாரிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்த விரைவாக பொலிஸ் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டிய ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்திய பொலிஸார், அங்கு இன்னுமொரு அறையில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இணையத்தளம் மூலம் அறிமுகமாகும் நபர்களின் நம்பிக்கைத் தன்மை உறுதி ஏற்படாத நிலையில் அவர்களை நம்பி, அழைக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம், இது தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers