கனடாவில் பணியிடத்தில் உயர் குதிகால் அணிதல் தடை

Report Print Mohana in கனடா

ரொறொன்ரோ- ஒன்ராறியோ மாகாண பணியாளர்கள் குதி உயர் காலணிகளை அணியும் கட்டாயத்தை தடை செய்யும் மசோதாவை மாகாணத்தின்லிபரல் அரசாங்கம் இன்று அறிமுகப்படுத்துகின்றது.

கிறிஸ்ரினா மார்ட்டினின் தனியார் உறுப்பினர் மசோதா ஆடை மற்றும் சீருடைகளின் ஒரு பகுதியாக குதி உயர் அணிவது பாதுகாப்பற்றதென தொழில் சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சட்டம், தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி திருத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் துறை பணியிடங்கள், சுகாதார பராமரிப்பு வசதிகள் போன்ற பணியிடங்களில் குதி காலணிகளால் ஆபத்துக்கள் மற்றும் கால் காயங்கள் ஏற்படுவதை தடைசெய்யும் நோக்கத்துடன் இந்த மசோதா நடைமுறை படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் குதி அணியாதவர்களை விட அணிபவர்களிற்கு தசை வலி, அதிக அளவிலான கால் பெருவிரல் வீக்கம், காயம் போன்றன ஏற்படும் என ஒன்ராறியோ பாத மருத்துவ அசோசியேசன் தலைவர் தெரிவிக்கின்றார்.

உணவகம் மற்றும் மது பானம் அருந்தகம் போன்ற இடங்களில் பணிபுரியும் பெண்கள் உயர் குதி, கட்டை பாவாடைகள் மற்றும் குறைந்த-வெட்டு மேல்சட்டை அணியுமாறு வற்புறுத்தப் படக்கூடாதென கடந்த வருடம் ஒன்ராறியோ மனித உரிமைகள் கமிசன் பாலினம்-குறித்த ஆடை குறியீடுகள் குறித்த கொள்கை காகிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா பணியிடங்களில் உயர் குதி அணியும் கட்டாயத்தை தடை செய்தது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers