கனடாவில் பெண்ணுக்கு சிறந்த நகரம் இதுதான்

Report Print Mohana in கனடா

அண்மை காலங்களில் ஆண் பெண்ணிற்கான ஊதிய இடைவெளி மிக மோசமாக இருப்பினும் பெண் ஒருவருக்கு கனடாவில் சிறந்த நகரம் விக்டோரியா என ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

பொருளாதார மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான பெண்களின் அணுகல், கல்வி, சுகாதாரம் மற்றும் தலைமைத்துவ நிலைமைகள் குறித்து பெண்கள் மற்றும் ஆண்களிற்கிடையிலா வேறுபாடுகளின் அடிப்படையில் கொள்கை மாற்றுக்கான கனடிய மையம் நடாத்திய கணிப்பில் கனடாவின் 25 பெரிய நகரங்களில் விக்டோரியா முதலிடத்தை பெற்றுள்ளது.

விக்டோரியாவில் மட்டுமே ஆண்களை விட அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனரெனவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மூத்த மேலாளர்கள் பதிவிகளில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி அளவினர் பெண்கள்.

வின்ட்சர், ஒன்ராறியோ மோசமான நகரமென தெரிவாகியுள்ளது. ஊதிய இடைவெளி சராசரியை விட சிறிய அளவு என தெரிவிக்கின்றது. ஆண்கள் உழைப்பதில் 75சதவிகிதத்தை பெண்கள் உழைக்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றது.

ஆனால் வின்சரில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் 23சதவிகிதமும் மூத்த மேலாளர்கள் 34சதவிகிதமும் பெண்கள். ஆண்களை விட பெண்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் குறைவடையாது இருப்பதும் கொடூரமான குற்றமாக காணப்படுவதும் பாலியல் துன்புறுத்தல் எனவும் CCPA தெரிவித்துள்ளது.

விக்டோரியா:

வின்ட்சர்:

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers