தீபாவளி வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய கனடிய பிரதமர்

Report Print Raju Raju in கனடா

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் ’தீபாவளி முபாரக்’ என தீபாவளிக்கு வாழ்த்து கூறிய நிலையில் அவர் குறிப்பிட்ட வார்த்தை தவறானது என பலர் விமர்சித்துள்ளனர்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தீபாவளி முபாரக்! நாங்கள் ஒட்டாவாவில் இரவு கொண்டாடவுள்ளோம், தீபாவளி நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

ஜஸ்டின் குறிப்பிட்ட ’முபாரக்’ என்பது அரபு வார்த்தை எனவும் அதை அவர் வாழ்த்துவதற்கு பயன்படுத்தியது தவறு எனவும் அதை மாற்றும்படியும் பல டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் மறு பதிவிட்டுள்ளனர்.

Truthsayer என்பவர் எழுதுகையில், முபாரக் என்பது அரபு வார்த்தை, இந்திய சொல் கிடையாது. நீங்கள் சுப தீபாவளி என குறிப்பிடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

abinayah raguram என்பவர், வாழ்த்தியதற்கு நன்றி பிரதமர் அவர்களே! அதை சுப தீபாவளி அல்லது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இப்படி பலரும் ஜஸ்டின் எழுதிய வார்த்தையை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பலரும் அவருக்கு மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

ஜஸ்டின் ட்ரூடோ அனைத்து வித இந்திய பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்து தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers