பாலியல் ரீதியாக என் மனைவியை துன்புறுத்தினர்: பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in கனடா

தலிபான் தீவிரவாதிகளால் பிணையக்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள Joshua Boyle பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கனடாவை சேர்ந்த Joshua Boyle என்பவர் அமெரிக்க குடிமகளை திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.

கர்ப்பிணியான மனைவியுடன் சுற்றுலா சென்றபோது தலிபான் தீவிரவாதிகள் இருவரையும் சிறைப்பிடித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரவாதிகள் இருவரையும் விடுதலை செய்ய மறுத்து வந்துள்ளனர்.

பிணையக்கைதியாக இருந்தபோது தாயாருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் Joshua Boyle குடும்பத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இவர்கள் அனைவரும் கனடா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் Joshua Boyle கருத்து கூறுகையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த என் மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர், என் குழந்தையையும் கொன்று விட்டனர்.

தீவிரவாதிகளின் தலைவரால் எங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பாதுகாவலரே இவ்வாறு செய்தார், ஆப்கான் அரசே எங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers