கனடா பற்றி பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

Report Print Raju Raju in கனடா

வேறு நாடுகளிலிருந்து குடியேறுவதற்கு உகந்த நாடுகளில் முக்கிய நாடாக கனடா விளங்குகிறது.

அப்படியான கனடா குறித்து பலரும் அறிந்திராத விடயங்கள் இதோ,
  • உலகில் அதிக படிப்பறிவு மிக்கவர்கள் வாழும் நாடு கனடாவாகும். இங்கு வசிப்பவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பட்டதாரியாவார்கள்.
  • உலகில் உள்ள மொத்த ஏரிகளை சேர்த்தால் வரும் கணக்கை விட அதிகளவிலான ஏரிகள் கனடாவில் உள்ளன.
  • மனிடோபாவின் சர்ச்சில் நகரில் பனிக்கரடிகள் நடமாட்டம் அதிகமுள்ளதால் அங்கு வசிப்பவர்கள் தங்களது கார்களை பூட்ட மாட்டார்கள், சாலையில் நடப்பவர்களை கரடி தாக்க வந்தால் நிற்கும் காருக்குள் அவர்கள் ஒளிந்து கொள்ளவே இவ்வாறு செய்யப்படுகிறது.
  • விபச்சார தொழில் செய்ய கனடாவில் சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விபச்சாரிகளை விலை கொடுத்து அழைத்து வருவதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது.
  • கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்கள் பனிக்கரடி வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
  • உலகின் மிக பெரிய கடலோர பகுதி கனடாவில் அமைந்துள்ளது.
  • கனடாவின் newfoundland மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல் சிலசமயம் முழுவதுமாக உறைந்து போகும். அந்த சமயத்தில் மக்கள் அங்கு ஹாக்கி விளையாடுவார்கள்.
  • மேக்ரோனி என்னும் கோதுமை வகை உணவு மற்றும் பாலாடைக்கட்டிகளை உலகிலேயே அதிகளவில் கனடியர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.
  • பூமியின் மொத்த ஈர்ப்பு விசையை விட கனடாவின் பெரிய பகுதிகளின் ஈர்ப்பு விசை குறைவாகவே உள்ளது.
  • எண்ணெய் இருப்புகள் அதிகளவில் வைத்திருப்பதில் கனடா உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers