சாலை விதியை மீறியதால் விபரீதம்: 4 பேர் உடல் நசுங்கி பலியான பயங்கரம்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் சாலை விதியை மீறியதால் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள Chateauguay நகரில் தான் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியை சேர்ந்த 4 பேர் இன்று அதிகாலை காரில் பயணம் செய்துள்ளனர். நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

கார் நெடுஞ்சாலை எண் 30-ல் சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, வெளியிடாதக் காரணத்திற்காக கார் திடீரென சாலையின் எதிர் திசையில் சென்றுள்ளது.

எதிரே பல வாகனங்கள் அசுர வேகத்தில் சென்றுள்ளன.

இந்நிலையில், எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்று நால்வர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. விபத்துக் குறித்து வந்த மீட்புக் குழுவினர் நபர்களை வெளியே மீட்டுள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 80 வயதான இருவரும், 15 வயதான சிறுவன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

எதிரே வந்த காரில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 56 வயதான பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

எஞ்சிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே குடும்பந்தைச் சேர்ந்தவர்கள் சாலை விதியை மீறி எதிர் திசையில் சென்றதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் பலியானது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments