கனடாவில் தடை! இதயநோயை தடுக்க அதிரடி சட்டம் அமுல்?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இதயநோயை தடுக்க செயற்கையான கெட்ட கொழுப்புகளை உணவில் சேர்க்க தடை உத்தரவு முன்மொழியபட்டுள்ளது.

கனடாவில் சில தவறான உணவு பழக்கத்தால் பலர் இதய நோய்க்கு ஆளாகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் கெட்ட கொழுப்புகள் அடங்கிய எண்ணெய்கள், பொருட்கள் உணவுகளில் சேர்க்கப்படுவது தான்.

அதிலும் கேக் போன்ற பேக்கிரியில் விற்கப்படும் உணவுகளில் கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

இதை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு கனடாவின் சுகாதார துறை இந்த பொருட்கள் தடை செய்யும் உத்தரவை முன்மொழிந்துள்ளது.

கனடிய மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில், கெட்ட கொழுப்புகள் அடங்கிய பொருட்களுக்கு முழு தடை வந்தால் அடுத்த 20 ஆண்டுகளில் 12000 பேரின் மாரடைப்பை தடுக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments