துரோகம் செய்த நண்பர்களை சுட்டுக் கொன்ற நபர்: கனடாவில் பயங்கரம்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் தொழிலில் துரோகம் செய்த நண்பர்கள் இருவரை நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Chipman நகரில் Raymond Nickerson(36) என்பவர் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் புதிய தொழிலை தொடங்கிய இவர் நண்பர்களான Jason Williams(40) மற்றும் Terry Sutton(39) என்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மூவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்து வந்துள்ளது.

இந்தக் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், நண்பர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட ரேமோண்ட் தீர்மானித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களது வீடுகளுக்கு சென்ற ரேமோண்ட் இருவரையும் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

துப்பாக்கி சூடு தொடர்பாக அருகில் குடியிருந்தவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்று விசாரணை நடத்திய பொலிசார் ரேமோண்டை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் இது திட்டமிடப்பட்ட இரட்டை கொலை எனத் தெரியவந்துள்ளது.

ரேமோண்ட் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments