மலாலாவிற்கு குடியுரிமை வழங்கும் கனடா: ஏற்பாடுகள் தீவிரம்

Report Print Peterson Peterson in கனடா

நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா கடந்த 2012-ம் ஆண்டு தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர் ஆவார்.

பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் மலாலாவிற்கு நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மலாலாவிற்கு ‘கெளரவ கனடிய குடியுரிமை’ வழங்கப்படும் என அப்போதைய பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் அறிவித்தார்.

இதே ஆண்டில் அக்டோபர் 22-ம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றபோது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்த கெளரவ குடியுரிமையை வழங்கும் நிகழ்ச்சியை எதிர்வரும் 12-ம் திகதியில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

விருதை பெறுவதற்காக மலாலா இன்னும் சில தினங்களில் கனடா நாட்டிற்கு பயணமாக உள்ளார்.

இது குறித்து மலாலா பேசியபோது, ‘அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதில் கனடா முன்னணியில் திகழ்ந்து வருகிறது.

இதுபோன்று உதவிக்கரம் நீட்டும் அரசாங்கத்திடம் கெளரவ குடியுரிமை பெறுவது எனக்கு கிடைத்த மிகச்சிறப்பான வாய்ப்பு’ என மலாலா கூறியுள்ளார்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த செயல்களுக்காக நெல்சன் மண்டேலா, தலாய் லாமா உள்ளிட்ட 6 வெளிநாட்டு தலைவர்களுக்கு கெளரவ கனடிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments