குடிபோதையில் விமானத்தை இயக்கிய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் குடிபோதையில் பயணிகள் விமானத்தை இயக்க முயன்ற விமானிக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த Miroslav Gronych(37) என்ற விமானி கனடா நாட்டில் Sunwing என்ற விமானத்தில் விமானியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தின்போது 120 பயணிகள் அமர்ந்திருந்த விமானத்தை இயக்குவதற்காக விமானத்தில் ஏறியுள்ளார்.

அப்போது, அவரால் உடுப்பை சரியாக அணிய முடியவில்லை. மேலும், இருக்கையில் அமர்ந்ததும் அவரது தலையை ஜன்னலுக்கு அருகில் வைத்துக்கொண்டார்.

துணை விமானியிடம் பேசியபோது வார்த்தைகளில் தெளிவு இல்லை. விமானி குடிபோதையில் இருக்கிறார் என்பதை உணர்ந்த துணை விமானி அவரை விமானத்தை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.

ஆனால், விமானி கீழே இறங்காமல் விமானத்தை இயக்க முயன்றுள்ளார். இவ்விவகாரம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மற்றொரு விமானியை ஏற்பாடு செய்து விமானம் பத்திரமாக புறப்பட்டு சென்றது.

விமானியின் ஹொட்டல் அறையில் சோதனை செய்தபோது வோட்கா மது பாட்டில் இருந்துள்ளது. மேலும், அவரது ரத்தத்தில் மதுவும் கலந்திருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து விமானியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

அல்பேர்ட்டா மாகாண நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் விமானத்தை இயக்க முயன்ற விமானிக்கு 8 மாதங்கள் சிறை தண்டனையும் 100 டொலர் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தண்டனைக்காலம் முடிந்த நாள் முதல் ஒரு ஆண்டுக்கு அவர் எந்த விமானத்தையும் இயக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments