ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரித்தானியா: கனடா எடுத்த அதிரடி முடிவு

Report Print Raju Raju in கனடா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்பில் தெரசா மே நேற்று கையெழுத்திட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானியாவுடன் வர்த்தக ரீதியான எங்கள் நட்பு தொடரும்.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பிரித்தானியாவோடு இன்னும் நெருக்கம் காட்டவே விரும்புகிறோம்.

பிரித்தானியா விலகலால் எங்கள் நட்புறவில் எந்த மாறுதலும் இருக்காது என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

தற்போது பிரித்தானியா கனடாவின் நான்காவது மிக பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments