காதலனால் அடித்துக்கொல்லப்பட்ட இளம்பெண்: காதல் முறிவால் ஏற்பட்ட விபரீதம்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் காதல் முறிவால் ஆத்திரம் அடைந்த காதலன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாண்ட்ரீயல் மாகாணத்தில் உள்ள குயூபெக் நகரில் 18 வயதான Daphne Boudreault என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார்.

இதே நகரில் Anthony Pratte-Lops என்ற நபருடன் இரண்டு ஆண்டுகளாக அவர் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சமீப நாட்களாக காதலனின் நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளாத காதலி அவரை விட்டு பிரிந்துச் சென்றுள்ளார்.

ஆனால், இதனை காதலனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தினமும் 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காதலியை தொடர்புக்கொண்டு மிரட்டியுள்ளார்.

இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த இளம்பெண் கடந்த புதன்கிழமை அன்று பொலிசாரிடம் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

பொலிசார் உடனடியாக காதலனை தொடர்புக்கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் காதலியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இத்தகவலை அறிந்து வந்த பொலிசார் சம்பவ இடத்திலேயே காதலனை கைது செய்தனர்.

தனது முன்னாள் காதலியை கொலை செய்தபோது ‘நரகத்திற்கு போ’ எனக் காதலன் பேசியுள்ள வீடியோவும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதலன் மீதான வழக்கு எதிரவரும் ஏப்ரல் 19-ம் திகதிக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments