மாரடைப்பால் பலியான 2 வாரக் குழந்தை: பெற்றோர் கண் முன்னால் நிகழ்ந்த சோகம்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் திடீர் மாரடைப்பால் இரண்டு வாரக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த தம்பதி இருவருக்கு அண்மையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில், வான்கூவர் நகரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக Vernon நகரில் இருந்து பெற்றோர் கடந்த திங்கள் கிழமை அன்று காரில் புறப்பட்டுள்ளனர்.

நீண்டப் பயணம் என்பதால் காரில் குழந்தை எவ்வித அசைவின்றி உறக்கத்தில் இருந்தது போன்று படுத்துக்கொண்டு சென்றுள்ளது.

சில மணி நேரத்திற்கு பிறகு குழந்தையை தந்தை தூக்கியபோது அது மூச்சு விடவில்லை என்பது உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்தவுடன், கார் இருந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டது.

ஆம்புலன்ஸ் சாலையில் தரையிறங்குவதற்காக இரு வழிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

ஹெலிகொப்டரில் குழந்தையை ஏற்றியதும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், குழந்தைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் Merritt நகரிலேயே குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது.

குழந்தையின் மரணத்திற்கு நீண்ட நேரப்பயணமும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குழந்தையின் உடல்கூறு ஆய்விற்கு பின்னரே முழுத்தகவல்களும் வெளியாகும்.

பிறந்து இரண்டு வாரங்களில் தங்களது கண் முன்னால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments