உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி கனடா செய்துள்ள சாதனை

Report Print Raju Raju in கனடா

உலகளவில் அதிக மக்கள் சுற்றுலாவுக்கு வரும் நாடாக இரண்டாவது இடத்தில் கனடா இருப்பதாக பிரபல நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது.

கனடா தினம் வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள வேளையில் கனடாவில் அமைந்திருக்கும் அழகான இடங்களை காண்போம்.

Vancouver

Vancouverல் கடலோரத்தை சுற்றி அழகாக தெரியும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த நகரத்தில் ஷொப்பிங் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

Toronto

இங்கு அமைந்திருக்கும் CN டவரிலிருந்து மொத்த Torontoவின் அழகையும் ரசிக்க முடியும். இங்கு அமைந்திருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உலக புகழ்ப்பெற்றதாகும்.

Montreal

இந்த நகரம் வரலாற்று முக்கியத்துவம் உள்ள நகரமாகும்.

காரணம், இங்கு அமைந்திருக்கும் புராதான கட்டடக்கலை தளங்கள். குளிர் காலத்தில் இங்கு நடைபெறும் ஹாக்கி விளையாட்டு புகழ்பெற்றதாகும்.

Whistler

Vancouverரிலிருந்து 2 மணி நேரத்தில் இந்த இடத்துக்கு போய் விடலாம். பனி மூடிய மலைகள், பனி சறுக்கு போன்ற விடயங்களால் இது மிக அழகாக காட்சியளிக்கிறது.

Cabot Trail, Nova Scotia

கடல் பரப்பை அழகாக பார்க்க வைக்கும் இந்த இடம் Nova Scotia வில் உள்ள Cape Breton தீவில் அமைந்துள்ளது.

Banff National Park, Alberta

இங்கு உள்ள மலையில் குதிரை சவாரி செய்வது பிரசத்தி பெற்றதாகும். இங்கு பனி துறைகள் மற்றும் பனிப்பாறைகளின் அழகு காண்போரை சிலிர்க்க வைக்கும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments