கனடிய பிரதமரின் அழகிய மறுபக்கம் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in கனடா

கனடாவின் இளம்வயது பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வான்கூவரில் ஆசிரியராக பணியாற்றினார்.

தந்தையின் இறப்புக்கு பின்னர் 2008 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த இவர், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பப்பினோ தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார்.

அதன்பின்னர் லிபரல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர், 2013 ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவரானார்.

அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, 184 இடங்களை வெற்றி பெற்று கனடிய பிரதமரானார்.

தற்போது அரசியலில் திறமையுடன் செயல்பட்டு வரும் இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இளம் வயதில் எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படங்கள் இதோ,

தந்தையுடன் ட்ரூடோ

தனது தந்தை Pierre Trudeau- டன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்,கல்லூரி காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார்.நீளமான முடிகளை வளர்த்து காதல் திரைப்படங்களில் வரும் ஹீரோ போன்று இருக்கிறார்.

விழிப்புணர்வில் ஈடுபட்ட போது

இவரது சகோதரர் avalanche - இல் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டில் இறந்ததையடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அங்கு சென்ற காட்சி.

மனைவியுடன்

தனது அழகிய மனைவி சோபியுடன், ஒன்றாக சேர்ந்து காரில் சந்தோஷமாக வலம் வரும் காட்சி.

திரைப்படத்தில் நடித்தபோது

Great War என்ற திரைப்படத்தில் ஒரு வீரனான நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

உரையாற்றிய போது

தன்னை சுற்றியிருப்பவர்களை கவரும் திறமை கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் சிந்திக்க வைக்கும் முறையில் அறிவாற்றலுடன் உரையாற்றி, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி செல்வார்.

2/5

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments