படை வீரரின் கொலை-தற்கொலை!

Report Print Arbin Arbin in கனடா

நோவ ஸ்கோசியாவை சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் படை வீரர் ஒருவரால் வெளிப்படையான கொலை-தற்கொலையினால் கொல்லப்பட்டனர்.

இவர்களின் மரண சடங்கிற்கான செலவினங்களை மத்திய அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. இளைப்பாறிய கோப்ரல் லயனல் டெஸ்மன்ட் தனது மனைவி ஷானா டெஸ்மன்ட், 10வயது மகள் ஆலியா டெஸ்மன்ட் மற்றும் தாயார் பிரென்டா டெஸ்மன்ட் ஆகியவர்களை அவர்களது வீட்டில் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த செவ்வாய்கிழமை இவர்கள் நால்வரினதும் உடல்கள் இவர்களது வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களது மரணச்சடங்கிற்கான செலவை மத்திய அரசாங்கம் ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளது.

இறந்தவர்களிற்கான கண்விழிப்பு ஊர்வலம் நடந்த சமயம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. டெஸ்மன்ட் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த ஒரு படைவீரர்.

இவர் ஒரு அதிர்ச்சிக்கு பின்னான மன உழைச்சலினால் (PTSD). பாதிக்கப்பட்டு அதற்கான ஆலோசனை பெற்றவர். வைத்தியசாலைக்கு சென்ற போது மருத்துவ பராமரிப்பு பெற மறுத்து விட்டார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments