நோவ ஸ்கோசியாவை ஓங்கி அடித்துள்ள வடகிழக்கு பனிபுயல்!

Report Print Arbin Arbin in கனடா

வடகிழக்கிலிருந்து நோவ ஸ்கோசியாவை நோக்கி ஓங்கி அடித்துள்ள சக்தி வாய்ந்த பனிப்புயலினால் இரவு பூராகவும் போர்த்தப்பட்டிருந்த மாகாணம் பனியை கிண்ட ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுகிழமை காலை ஏராளமான மக்கள் பனியால் மூடப்பட்ட வீதிகள் நடைபாதைகள் முற்றங்களில் பனி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான வீதிகள் பனியினால் மூடப்பட்டு போக்குவரத்தை இடர்படுத்துகின்றது. ஹலிவக்ஸ், ஸ்ரெயின்வீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு அல்லது தாமதமாக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 40-சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி பொழிந்துள்ளது. படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் பனி பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாணம் பூராகவும் பனிபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களை வீதிகளை விட்டு விலகி இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments