ரொறொன்ரோவில் பரபரப்பு: புத்தாண்டில் தீக்கிரையான கட்டப்பட்டு கொண்டிருந்த மாளிகை!

Report Print Arbin Arbin in கனடா

கட்டப்பட்டு கொண்டிருந்த மாளிகை ஒன்று இரவு ஒரு மூன்று-அலாரம் தீக்கிரையாகியது. ரொறொன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மில்லியன் டொலர்கள் சேதமேற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறைந்தது 8மில்லியன் டொலர்கள் சேதமாகி இருக்கலாம். நெடுஞ்சாலை 401 தெற்கில் பேவியு அவெனியுவிற்கு அப்பால் 86 வொறெஸ்ட் ஹைட்ஸ் புளுவாட்டில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.30மணியளவில் நடந்துள்ளது.

வீட்டை சுற்றி வேலி போடப்பட்டிருந்ததால் அருகாமையில் செல்வது கடினமாக இருந்ததென தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

தீப்பிடித்த சமயம் வீட்டிற்குள் எவரும் இருக்கவில்லை. கிட்டத்தட்ட 80 தீயணைப்பு வீரர்கள் காணப்பட்டனர். வீட்டின் உட்பகுதி முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டன.

வெளிப்புற சுவர்களின் அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால் அண்மையில் செல்வது பாதுகாப்பற்றதென கூறப்படுகின்றது.

கட்டுமான பணி முடிவடைந்ததும் வீடு கிட்டத்தட்ட 6,000சதுர அடி கொண்டதாகவும் இதற்கான செலவு 8மில்லியன்களிற்கும் 10மில்லியன் டொலர்களிற்கும் இடைப்பட்ட தொகையாக இருக்கும் எனவும் மதிப்பிட படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments