கணக்கு பிழையினால் 160,00டொலர்கள் புதையல் பெறும் மர்ம மனிதன்?

Report Print Arbin Arbin in கனடா

ஒரு இலக்கம் மட்டுமே மாறியது ஆனால் அம்மாற்றம் மனிதனின் அதிஷ்ட எண்ணாக மாறிவிட்டது. இப்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் வர்த்தக நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்கின்றது.

ஒரு கணக்கு பிழை ஏற்பட்டதன் காரணமாக ஏலமொன்றில் டொலர்கள் 16,323.50 எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வர்த்தக நிறுவனம், RBC வங்கி மற்றும் ஜோன் டோ- என்பது மட்டுமே தெரியவந்துள்ள மனிதன் ஒருவர் ஆகியோர்க்கிடையில் ஒரு மாதகாலமாக நீடித்த மின்னணு நிதி பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு தவறான இலக்கம் காரணமான சரித்திரம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நிதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜோன் டோ குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறாத போதிலும் குறிப்பிட்ட தொகை பணத்தை இவர் வைத்து கொள்ள விரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிவில் உரிமை கோரல் அறிவிப்பு மூலம் நிறுவனம் கடந்த யூன் மாத புதையல் தொகையான டொலர்கள்163,23.50ன் அதிஷ்ட சாலி டோ என்பவர் எனவும் தரகு நிறுவனம் ஒன்றின் கணக்காளர் தெரியாமல் பணத்தை இவரது RBC கணக்கிற்கு மாற்றி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

RBC ஜோன் டோவிடம் பணத்தை திரும்ப செலுத்தும் படி கேட்டதாகவும் ஆனால் அவ்வாறு செய்ய அவர் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நீதிமன்ற உத்தரவின்றி இவரது பெயரை வெளியிட ஆர்பிசி மறுத்து விட்டது. ஏனெனில் இது சட்டமன்ற ஒப்பந்த அடிப்படை ரீதியிலானதாகும்.

நிறுவனம் ஜோன் டோ மீது வழக்கு தொடர்கின்றது அத்துடன் ஆர்பிசிக்கும் இவரது பெயரை வெளியிடுமாறு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது.

தனியுரிமையை கருத்தில் கொண்டு ஆர்பிசி கருத்துக்கள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டது. கருத்துக்களிற்கு நிறுவனத்தையும் தொடர்பு கொள்ள செய்தியாளர்களால் முடியவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments