கொலை குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறையில் கழித்த நபர்: அடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Peterson Peterson in கனடா
526Shares

கனடா நாட்டில் கொலை குற்றத்திற்காக 37 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு தற்போது மீண்டும் ஒரு கொலை குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டை சேர்ந்த Tommy J. Ross Jr.(தற்போதைய வயது 58) என்பவர் கடந்த 1978-ம் ஆண்டு கனடாவில் குடியேறி பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, விக்டோரியா நகரை சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கனடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில், சிறையில் 37 ஆண்டுகள் கழித்த பின்னர் பரோலில் அந்நபர் வெளியே வந்துள்ளார்.

மேலும், அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டபோது திடீரென அமெரிக்க எல்லையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இது குறித்து அமெரிக்க பொலிசார் வெளியிட்டுள்ள செய்தியில், கனடாவில் நபர் ஒரு பெண்ணை கொலை செய்ததற்கு முன்னதாகவே வாஷிங்டன் நகரில் அதே 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Janet Bowcutt(20) என்ற மற்றொரு இளம்பெண்ணை கொலை செய்ததாக அவர் மீது தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நபர் தற்போது அமெரிக்க பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவரிடம் தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments