சகோதரர்கள் இருவரை கொடூரமாக கொன்ற மலைப்பாம்பு

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சகோதர்கள் இருவரை மலைப்பாம்பு ஒன்று கொடூரமாக கொன்ற வழக்கில் அதன் உரிமையாளர் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

குயூபெக் மாகாணத்தில் உள்ள Campbellton என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் Jean-Claude Savoie(39) என்ற நபர் விலங்குகளை வளர்க்கும் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணை மீதுள்ள முதல் தளத்தில் தான் இவரது வீடும் அமைந்துள்ளது.

எனினும், இந்த விலங்குகள் பண்ணைக்கு அவர் முறையாக அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Connor Barthe(6) மற்றும் Noah Barthe(4) என்ற பெயருடைய சகோதர்கள் இவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர், மேல் தளத்தில் உள்ள வீட்டு அறையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், கீழ்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மலைப்பாம்பு ஒன்று கூண்டை விட்டு வெளியேறி மேல்தளத்திற்கு சென்றுள்ளது.

பின்னர், ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முயன்றபோது கண்ணாடி உடைத்துக்கொண்டு அறையில் தூங்கிக்கொண்டு கிருந்த இரண்டு சகோதர்கள் மீது விழுந்துள்ளது.

இதில் இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நிகழ்ந்தது தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் உரிமையாளரான Jean-Claude Savoie அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆனால், விசாரணையில் உண்மை நிலவரம் வெளியானதை தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்தனர்.

அலட்சியம் காரணமாக இருவரின் மரணத்திற்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் வந்துள்ளது.

அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்ட குற்றத்திற்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 11-ம் திகதி முடிவடையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments