பிரதமர் மீது பூசணக்காய் விதைகளை வீசி போராட்டம் செய்த பெண்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது பூசணிக்காய் விதைகளை வீசி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் நேற்று ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Hamilton நகருக்கு சென்று அங்குள்ள மேயர் மற்றும் கவுன்சிலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளர்.

பின்னர், ஆலோசனையை முடித்த பிரதமர் பொலிசார் பாதுகாப்புடன் வெளியே வந்தபோது கூட்டத்தினரை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, கூட்டத்தில் நின்றுருந்த பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பூசணிக்காய் விதைகளை பிரதமர் மீது வீசி ‘சொன்ன வார்த்தையை நிறைவேற்றுங்கள்’(Keep your promises) என உரக்க குரல் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்த பாதுகாப்பு பொலிசார் உடனடியாக அப்பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் பிரதமர் உள்பட யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில் அப்பெண் கிரீன் கட்சியை சேர்ந்த Ute Schmid-Jones என்ற பெயருடையவர் என தெரியவந்தது.

மேலும், இதே நகரில் சுமார் 80 கி.மீ தூரத்திற்கு புதிதாக எண்ணெய் குழாய்களை அமைக்க பிரதமர் அனுமதிக்க கூடாது என்பதை வலிறுத்த போராட்டம் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், பெண்ணிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments