அசுர வேகத்தில் சென்ற காரை துரத்திய பொலிஸ்: பரிதாபமாக பலியான ஊழியர்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் பொலிசாருக்கு அஞ்சி அசுர வேகத்தில் சென்ற கார் ஒன்று சாலைப்பணியில் ஈடுப்பட்டிருந்த ஊழியர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ரொறொன்ரோ நகரில் உள்ள Scarborough என்ற பகுதியில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை 11.45 மணியளவில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை நிற BMW கார் ஒன்று அசுர வேகத்தில் பயணம் செய்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் பெற்ற பொலிசார் கார் சென்ற திசையில் அதனை துரத்தி சென்றுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த கார் Midland Avenue என்ற பகுதியில் உள்ள சாலையில் வேகம் குறையாமல் சென்றுள்ளது.

அப்போது, ஊழியர் ஒருவர் தார் சாலையை பராமரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வேகமாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பத்தை தொடர்ந்து பின்னால் வந்த பொலிசார் மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், ரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டிருந்ததால் அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பொலிசார் விரட்டி சென்ற அந்த மர்ம கார் தான் ஊழியர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஊழியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் மாயமாக மறைந்த BMW காரை ஓட்டிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments