கின்னஸ் சாதனை படைத்த 92 வயது முதியவர்

Report Print Fathima Fathima in கனடா

உலகின் மிக வயதான பிளம்பர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் கனடாவின் 92 வயது முதியவர்.

கனடாவை சேர்ந்த லோர்ன் பிக்லி(Lorne Figley) என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

92 வயதான போதிலும் பிளம்பர் தொழிலில் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார்.

1947ம் ஆண்டில் தொழிற்பயிற்சி முடித்த இவர், 4 நண்பர்களுடன் இணைந்து Broadway Heating Ltd என்ற நிறுவனத்தை தொடங்கி, பின்னர் நிறுவனத்தின் முதலாளியானார்.

இந்த வேலையை தான் காதலிப்பதாகவும், தொடர்ந்து வேலை செய்வதால் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடிகிறது எனவும், வேலை செய்து கொண்டிருக்கும் போதே மரணம் நிகழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments