குளியலறையில் பிணமாக கிடந்த பெண்: முன்னாள் கணவர் கொலையாளியா?

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் வணிக வளாகத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Burnaby நகரில் Hee Sook Youn(59) என்ற பெண் வணிக வளாகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இப்பெண்ணிற்கும் இவரது முன்னாள் கணவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இவர்கள் பிரிந்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று வணிக வளாகத்தில் உள்ள குளியலறையை சுத்தம் செய்தபோது அங்கு உரிமையாளரின் சடலம் இருந்ததை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வளாகத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை அன்று பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்த பெண்ணிற்கும் அவரது கணவரான Youngku Youn(60) என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து மனைவிய சந்திக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல், முன்னாள் கணவர் ஏற்கனவே அவரது மனைவியை தாக்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே, இந்த சம்பத்தில் முன்னாள் கணவருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாகவும், அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments