வயதான தம்பதியை கொடூரமாக கொலை செய்த நபர்: காரணம் என்ன?

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் வயதான தம்பதியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Joao Nascimento (93) மற்றும் Maria Nascimento(81) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்த 40 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தாலும், இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் இத்தனை ஆண்டுகளும் தனியாகவே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இவர்கள் வசித்து வரும் பகுதியில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியானது.

இத்தகவல்களை தொடர்ந்து நேற்று இரவு நேரத்தில் வீடு ஒன்றில் புகுந்த நபர் அங்குள்ள பொருட்களை திருடிக்கொண்டு அருகில் இருந்த வயதான தம்பதி வீட்டில் நுழைந்துள்ளான்.

அப்போது வீட்டிற்குள் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தபோது இருவரையும் அவர் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் தம்பதி இருவரும் வீட்டிலேயே பலியாகியுள்ளனர். தாக்குதலை நடத்தி விட்டு தப்பிய 31 வயதான Edward Kyle Roberts என்ற நபரை பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

பொலிசார் விசாரணையை தொடங்கியபோது பணம் மற்றும் நகைகளை திருடுவதற்காக அவர் சென்றிருக்கலாம் என்றும், அப்போது இந்த இரட்டைக் கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.

எனினும், நாளை மறுநாள் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதால், அதன் பிறகு உண்மை தகவல்கள் வெளியாகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments