றேமண்ட் சோவிற்காகத் தொண்டாற்றிய தமிழர்கள் மிகவும் கண்ணியமாகச் செயற்பட்டனர்– நீதன் சாண்

Report Print Suresh Tharma in கனடா

பற்றிக் பிறவுனின் கட்சிக்காகப் தொண்டாற்றிய தமிழர்கள் மிகவும் ஒழுங்கமைப்பட்ட முறையில் செயற்பட்டதாகவும், அவர்களது பிரச்சார வெற்றிக்கு தான் தலை வணக்குவதாக தனது முகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தமிழர்கள் போட்டியிட்ட இடத்தில் மற்றைய கட்சியில் போட்டியிட்ட றேமண்ட் சோவிற்காக தொண்டாற்றிய தமிழர்கள் பற்றிய பல விதமான கருத்துக்களை பலரும் கூறிவருகின்றனர் என்பதனால் தனது பதிவை மேற்கொண்டுள்ள நீதன் சாண்,

முதலில் முன்னேற்றவாதக் கண்சவேட்டிவ் கட்சிக்காக பணியாற்றிய தமிழர்களைத் தான் அவர்களது வெற்றிக்குப் பராட்டுவதாகவும்,

இரண்டாவதாக, நான் புதிய ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவன் என்ற காரணத்தையும் கடந்து, கனடியத் தமிழர்கள் சகல கட்சிகளிலும் காத்திரமான பங்கு வகிப்பதையும், இதர கட்சிகளின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்று செயற்படுவததையும் வரவேற்பதாகவும்,

மூன்றாவதாக, மேற்படி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல தமிழர்கள் ஏற்கனவே தமிழ்ச் சமூகத்திற்கும், கனடிய சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்தவர்கள் என்ற முறையில் அவர்கள் தங்களது கட்சி தொடர்பான கொள்கை மற்றும் நம்பிக்கை முன்னெடுப்புக்களில் காத்திரமாகப் பங்காற்றுவார்கள் எனத் தான் நம்புவதாகவும்,

நான்காவதாக, இரண்டு தமிழர்கள் போட்டியிடுகின்றார்கள் எனவே தமிழ் வாக்குக்களை நாம் பெற முடியாது என்று அவர்கள் ஒதுங்கி நிற்கவில்லை. கடின உழைப்பை மேற்கொண்டு தங்களது செய்தியை தமிழ்மக்களிடம் எடுத்துச் சென்றார்கள் அதற்கான நான் தலை வணங்குகின்றேன் எனவும்,

ஐந்தாவதாக, இந்தத் தமிழர்கள் மிகவும் திறந்த மனத்துடனும், வெளிப்படையாகவும், கண்ணியமாகவும் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர் எனவும் தெரிவித்து,

எனவே அந்தத் தமிழர்களை அவமரியாதைத்படுத்த முனைவதை விடுத்து, அவர்கள் நம்பியுள்ள கொள்கைகளில் அவர்கள் விசுவாசிக்கும் கட்சியில் தங்களிற்கு எந்தக் கட்சி பிடிக்கும் என்ற விடயத்தில் அவர்களை செயற்படவதில் யாரும் தலையிடக்கூடாது என்றார்.

இது நீதன் சாண் ஒரு கண்ணியமான, தனது வெற்றியைத் தவற விட்டதற்கும் அப்பால் மாற்றுத் தரப்பை பாராட்டும் நேர்மையை உடைய ஒருவர் என்பதையும், கனடிய தமிழ்ச் சமூதாயத்திற்கு நேர்மையான வழியில் செயலாற்றும் தலைவர்களில் ஒருவர் என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments