புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திருட்டு: மருத்துவமனையில் நிகழ்ந்த சோக சம்பவம்

Report Print Peterson Peterson in கனடா
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திருட்டு: மருத்துவமனையில் நிகழ்ந்த சோக சம்பவம்
229Shares

கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து சுமார் 1,000 டொலர் பணத்தை திருடியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Surrey நகரில் Sierra Blanchette(23) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் இவரை நோய் தாக்கியதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சோதனை செய்தபோது அவரது சிறுநீரகத்தில் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது.

பல்வேறு சிகிச்சை எடுத்த பிறகும் அவரால் புற்றுநோயை குணப்படுத்த முடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவருடைய இடுப்பு பகுதியில் இருந்த கட்டியை மருத்துவர்கள் நீக்கினார்கள்.

ஆனால், அவரது சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் கட்டி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனை பார்த்த மருத்துவர்கள் அவர் அதிகபட்சம் இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிர் வாழ முடியும் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் 3 வாரங்களாக தங்கியுள்ளதால் அதற்கு கட்டணத்தை செலுத்த ஏடிஎம் சென்று 700 டொலர் எடுத்து வந்துள்ளார்.

மேலும், அவரிடம் ஏற்கனவே 300 டொலர் இருந்துள்ளது. 1,000 டொலரை பர்ஸில் வைத்துக்கொண்டு தான் தங்கியிருந்த அறைக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், பர்ஸை அறையில் வைத்த சில நிமிடங்களில் அதனை யாரோ திருடியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறையில் கண்காணிப்பு கமெராவும் வைக்கப்படவில்லை.

ஏற்கனவே வறுமையில் வாடும் அந்த தாயார் தற்போது வாடகை கட்டமுடியாமல் திணறி வருகிறார்.

இது குறித்து செவிலியர்கள் பேசியபோது, 1,000 டொலரை திருடிய அந்த நபர் உண்மையில் இரக்கமற்றவராக தான் இருப்பார். இது தொடர்பாக பொலிஸில் புகார் கொடுங்கள்’ என ஆலோசனை வழங்கியுள்ளார்.

‘நான் உயிர் வாழ போவது இன்னும் ஒரு வருடம் மட்டுமே. இந்த நிலையில் திருடனை பற்றி கவலைக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

எதிர்காலத்தில் எனது இரண்டரை வயது மகன் நல்ல சூழலில் வளர வேண்டும் என்பதையே தான் விரும்புவதாக தாயார் உருக்கமாக பேசியுள்ளார்.

மரணத்தை எதிர்நோக்கியுள்ள பெண்ணிடம் திருடிய இச்சம்பவம் வெளியானதை தொடர்ந்து, அந்நகர மக்கள் தாயாருக்காக நிதி திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments