மூன்று பாலியல் வழக்கில் தேடப்பட்ட 2 குற்றவாளிகள் கைது

Report Print Arbin Arbin in கனடா
மூன்று பாலியல் வழக்கில் தேடப்பட்ட 2 குற்றவாளிகள் கைது
419Shares

கனடாவில் 3 பாலியல் வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ நகரை சேர்ந்த 38 வயது Ochieng Murray மற்றும் 37 வயது Jermaine Budgeon ஆகிய இருவர்தான் பொலிசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர்கள்.

கடந்த 1998 ஆம் ஆண்டு 3 மாத குழந்தை ஒன்றை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பின்னர் கொலை செய்துவிட்டு இவர்கள் இருவரும் தலைமறைவானதாக அப்போதைய விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேப்போன்று குறிப்பிட்ட நபர்கள் 15 வயது இளம்பெண் ஒருவரையும் 32 வயது பெண்மணி ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி டொராண்டோ பொலிசாரால் மூரே என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் குற்றம் தொடர்பாக பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட நபரை வரும் திங்கள் அன்று டொராண்டோ குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

மூரே கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்த Keele தெரு பகுதியில் இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் ஒரு நபர் தங்கியிருந்ததாக விசாரணை அதிகாரிகள் அப்போதே சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட வழக்குகளில் தொடர்புடைய 37 வயது Jermaine என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் அறிய வரும் பொதுமக்கள் அதை பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் அது உதவிகரமாக அமையும் என பொலிசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments