இறந்தவரின் அன்பை நினைவு கூற வானத்தில் பறந்த பட்டாம்பூச்சிகள்

Report Print Deepthi Deepthi in கனடா
இறந்தவரின் அன்பை நினைவு கூற வானத்தில் பறந்த பட்டாம்பூச்சிகள்
306Shares

இறந்தவரின் அன்பை நினைகூறும் விதமாக கனடாவில் 500 பட்டாம்பூச்சிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

கனடாவின் Kelowna என்ற நகரில் கூடியிருந்த ஏராளமானோர், fourth annual Central Okanagan Hospice Association (COHA) சார்பில், சுமார் 500 monarch பட்டாம்பூச்சிகளை வானில் பறக்கவிட்டு சந்தோஷமடைந்துள்ளனர்.

இது பறக்கவிடுவதற்கான காரணம் குறித்து Amber Davis என்பவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தந்தை இறந்துவிட்டார்.

அவர் இறந்துவிட்ட பின்னர் எங்கள் வீட்டின் பின்புறத்தில் பட்டாம்பூச்சிகள் கூட ஆரம்பித்தன, இதனைப்பார்த்த எங்களுக்கு, எங்களுடைய தந்தை திரும்பி வந்துவிட்டதாக ஒருவித சந்தோஷம் ஏற்பட்டது, அதன்பின்னர் ஒரு நாள் நானும், இன்னும் 100 பேர் சேர்ந்து, நாம் அன்பு செலுத்தியவர்களை நினைவுகூறுவதற்கான பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டோம்.

இதன் மூலம் எங்கள் அன்பு இறந்தவர்களை சென்றடைகிறது, எனவே நாங்கள் தூதுவர்களாக செயல்படுகிறோம் இதன் நோக்கம், நம்மை விட்டு பிரிந்தவர்கள் மீது அன்பு செலுத்துவதே ஆகும்.

தற்போது, இதனை பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments