கனடா நெடுஞ்சாலையில் கார்-டிரக் மோதி பயங்கர விபத்து: அதிஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்

Report Print Basu in கனடா
520Shares

கனடா நெடுஞ்சாலையில் கார்-டிரக் மோதிக் கொண்டு பயங்கர விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், கனடாவின் west of Morinville பகுதியல் உள்ள நெடுஞ்சாலை 44 மற்றும் நெடுஞ்சாலை 643 இல் குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை 643ல் இரண்டு பேருடன் பயணித்துக் கொண்டு வந்த கார், நெடுஞ்சாலை 44ல் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேருடன் பயணித்து வந்த டிரக் உடன் மோதி விபத்து ஏற்பட்டதாகவும்.

இதில் காரில் பயணித்த வந்த இருவரும், டிரக்கில் இருந்த மூன்று பேரும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் வாகனங்களுக்கு பயங்கர சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளது, ஆனால் அந்த அளவிற்கு யாருக்கும் காயங்களோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை, இது ஒரு நல்ல விஷயம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments