மகள்களுக்காக மரத்தில் கட்டிய ஊஞ்சலை அகற்ற சொன்ன அதிகாரிகள்: ஏன் தெரியுமா?

Report Print Peterson Peterson in கனடா
மகள்களுக்காக மரத்தில் கட்டிய ஊஞ்சலை அகற்ற சொன்ன அதிகாரிகள்: ஏன் தெரியுமா?
793Shares

கனடா நாட்டில் மகள்களுக்காக மரத்தில் கட்டிய ஊஞ்சலை அகற்ற பெற்றோருக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கல்கேரி நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 8 மற்றும் 10 வயது மகள்களுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிற்கு வெளியே மகள்கள் விளையாடுவதற்காக பெற்றோர் ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர்.

கிராம புறங்களில் மரத்தில் ஊஞ்சல் கட்டி அதன் மீது அமர்ந்து விளையாடுவது போன்று ஒரு ஊஞ்சலை அவர்கள் மரத்தில் கட்டியுள்ளனர்.

மரத்தில் ஊஞ்சல் கட்டியுள்ள இந்த விவகாரம் அந்நகர அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

உடனடியாக வீட்டிற்கு வந்த அதிகாரிகள், மரத்தில் கட்டியுள்ள அந்த ஊஞ்சலை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக Jeannette Wheeler என்ற அரசு அதிகாரிகள் பேசியபோது, ‘கல்கேரியில் மரங்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

இதனடிப்படையில், மரங்கள் மீது விளம்பர பலகைகளை கட்டுவது, ஊஞ்சலை கட்டுவது உள்ளிட்ட எந்த பொருளையும் மரத்துடன் சேர்த்து இணைக்க கூடாது.

இதுமட்டுமில்லாமல், வளர்ப்பு நாய்களை கூட மரத்தில் கட்டக்கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த விதிமுறைகள் பின்பற்ற வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் உத்தரவை ஏற்றுக்கொண்ட பெற்றோர் தனது மகள்களை சமாதானப்படுத்திய பிறகு இன்னும் ஒரு வாரத்தில் ஊஞ்சலை நீக்கிவிடுவதாக அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments