கனடாவை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அரசு முடிவு

Report Print Peterson Peterson in கனடா
கனடாவை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அரசு முடிவு
948Shares

கனடா நாட்டை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பு தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சரான Ralph Goodale நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘கனடா நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டின் இரண்டாவது பக்கத்தில் உள்ள நபரின் முழு பெயர், குடியுரிமை, கடவுச்சீட்டை வழங்கியவர் மற்றும் நபரின் பாலினம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்.

இதுபோன்ற தகவல்களை சேகரிப்பதன் மூலம் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பது, நபர்களை சட்டவிரோதமாக கடத்துவது, சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்ளும் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது, புகலிடம் கோரி வருபவர்களை குடியமர்த்துவது மற்றும் விசா வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.

கனடாவை விட்டு தரை வழியாக வெளியேறினால், அமெரிக்க எல்லையில் உள்ள பொலிசார் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரித்து கனேடிய அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்புவார்கள்.

வான்வழியாக கனடாவை விட்டு வெளியேறினால், விமான நிறுவன அதிகாரிகள் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரித்து கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்குவார்கள்.

இதுமட்டுமில்லாமல், கடவுச்சீட்டு தகவல்களை சேகரிப்பதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும்.

மேலும், கனடா நாட்டிற்கு வெளியே சென்ற பிறகும் சிலர் கனேடிய வரிகளை செலுத்தாமல் இருப்பது, நாட்டிற்கு வெளியே இருந்துக்கொண்டு அரசாங்கம் அளிக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான மில்லியன் அளவிலான பணத்தை சட்டவிரோதமாக பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க முடியும்.

இப்படி தடுப்பது மூலம் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் சுமார் 194 மில்லியன் டொலர் முதல் 319 மில்லியன் டொலர் வரை அரசு சேமிக்க முடியும்’ என Ralph Goodale தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது கனடாவும் நாட்டை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments