இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை.. பெரும் அதிர்ச்சியில் பொதுமக்கள்

Report Print Kavitha in வர்த்தகம்

சென்னையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று தங்கம் விலை சவரனுக்கு 288 ரூபாய் உயர்வு பெற்றுள்ளது.

இன்று ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. இந்த விலையுர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 3886 ரூபாவாக இருந்த தங்கம் இன்று 3922 ரூபாவாக கிராமிற்கு உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றது.

தங்கத்தின் தேவைக்கு இறக்குமதியே இந்தியா முழுமையாக நம்பி இருக்கின்ற காரணத்தால் டொலரின் மதிப்பு உயரும் போது எல்லாம் தங்கத்தின் விலையும் அதிகரித்தே செல்லும் என கூறப்படுகின்றது.

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரிக்கும் என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,616க்கு விற்பனை செய்யப்பட்டது மற்றும் நேற்று ரூ.29,832க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்