ஈ-சிகரட் பயன்படுத்த அதிரடியாக தடை விதிப்பு

Report Print Givitharan Givitharan in வர்த்தகம்

அமெரிக்காவில் அதிக அளவில் ஈ-சிகரட் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கருத்தில் கொண்டு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதன் முதலாக அமெரிக்காவில் ஈ-சிகரட்டினை தடை செய்யும் நகரமாக சான் பிரான்சிஸ்கோ காணப்படுகின்றது.

தடை தொடர்பான அறிவிப்பு கடந்த செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கறுப்பு சந்தையில் இதனை விற்பனை செய்யவும் தடை விதித்து கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாலிருந்து அதிகளவு ஈ-சிகரட் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்காவின் Food and Drug Administration (FDA) ஆனது ஈ-சிகரட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டிற்குள் மீள்பரிசீலணை செய்வதற்கும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்