ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை!

Report Print Kabilan in வர்த்தகம்

கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என தெரிவித்தார். இது ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான்.

மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர். தனியுரிமை தனித்துவமானது.

இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும்.

கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers