கூகுளின் நெஸ்ட் உற்பத்திகளை புறக்கணிக்கும் அமேஷான்

Report Print Givitharan Givitharan in வர்த்தகம்

கூகுள் நிறுவனமானது வீட்டு பாவனைக்கு தேவையான உபகரணங்கள் சிலவற்றினை ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.

இவை கூகுள் நெஸ்ட் உற்பத்திகள் என அழைக்கப்படுகின்றன.

கூகுள் குரோம்காஸ்ட், ஹோம் ஸ்பீக்கர் போன்றன இவற்றுள் அடங்கும்.

இப் பொருட்கள் இதுவரை காலமும் அமேஷான் தளத்தின் ஊடாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் எதிர்காலத்தில் இவற்றினை விற்பனை செய்வதை அமேஷான் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளின் மேற்கண்ட உற்பத்திகளைப் போன்றே அமேஷான் நிறுவனமும் Fire TV, Echo ஸ்பீக்கர் என்பவற்றினை வடிவமைத்துள்ளன.

எனவே எதிர்காலத்தில் தனது உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்