இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு HUAWEI வழங்கும் புதிய ஸ்மார்ட்!

Report Print Thayalan Thayalan in வர்த்தகம்
14Shares

இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட் போன்களில் முதலிடம் பிடிக்கும் Huawei , அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Huawei nova 2i என்னும் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இந் நிகழ்வு கொழும்பில் உள்ள Park Street Mews இல் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இது Huawei Sri Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷீண்லீ வாங் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த தொலைபேசியானது இலங்கையில் 44,900 ரூபாவில் கிடைக்கப்பெறும் என வாடிக்கையாளர்களுக்கு Huawei தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த கைத்தொலைபேசி graphite black, prestige gold , ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறும் என Huawei இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்