அமேசானுடன் போட்டி போடும் வால் மார்ட்!

Report Print Thayalan Thayalan in வர்த்தகம்

இணையத்தளத்தின் ஊடாக பொருட்கள் விற்பனையில் முதன்மை வகிக்கும் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்குக் கடும் போட்டியை வழங்கும் நோக்கில் தனது இணைய வியாபாரத்தில் வால் மார்ட் நிறுவனம் அதிக கவனம் எடுக்கவுள்ளது.

தனது இணைய வியாபாரத்தை மேலும் 40 சதவீதத்துக்கு அதிகரிக்க வால் மார்ட் நோக்கம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பாரம்பரியமான பெரும் அங்காடி வணிக வளாகங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வால் மார்ட் அடுத்த ஆண்டில் மேலும் 1,000 இணையம் வழி விற்பனை முகப்பிடங்களை அமைக்கவிருக்கின்றது. தற்போது உள்ள எண்ணிக்கையை விட இது இருமடங்கு அதிகமாகும்.

walmart.com என்ற இணைய முகவரியிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு அமைக்கப்படும் இந்த இணைய வணிக முகப்பிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாரங்கள் பூர்த்தி செய்வதற்கு உதவிகள் வழங்கப்படும்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தனது விற்பனை வருமானத்தை மேலும் 3 சதவீதம் அதிகரிக்க வால் மார்ட் எண்ணம் கொண்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers